மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது
அவிதிதவிஷயாந்தரஸ்ஸடாரே
ருபநிஜதாமுபகாநமாத்ரபோக
அபிசகுணவஸாத் ததேக ஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
இரு விகற்ப நேரிசை வெண்பா
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்-ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.
கண்ணிநுண்சிறுத்தாம்பு
கலி விருத்தம்
937
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.#
1
938
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
2
939
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்,
உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே.
3
940
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
புன்மை யாகக் கருதுவ ராதலின்,
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்,சட கோபனென் நம்பியே.
4
941
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெலாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேன்சதிர்த் தேனின்றே.
5
942
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே.
6
943
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.
7
944
அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.
8
945
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்,
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே?
9
946
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே.#
10
947
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்பதி, வைகுந்தம் காண்மினே.#
11
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com