திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
1. கோயில் - பாதாதி கேசம் |
பண் - பஞ்சமம் |
215
மையல் மாதொரு கூறன் மால்
விடையேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக்
கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை
உள்ளிடம் கொண்டனவே. |
1 |
216
சலம்பொற் றாமரை தாழ்ந்தெழுந்த
தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணியார்
தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து)
ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை
உள்ளிடங் கொண்டனவே. |
2 |
217
குருண்ட வார்குழல் கோதை மார்குயில்
போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள்
திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ
ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே. |
3 |
218
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ்
தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து
வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே
தமியேனைத் தளிர்வித்ததே. |
4 |
219
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம்
நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார்
தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும்
திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே. |
5 |
220
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து)
ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்
தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே. |
6 |
221
படங்கொள் பாம்பனை யானொடு
பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும்
தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
வினையேனை மெலிவித்தவே. |
7 |
222
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்
தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும்
திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
அடியேனை ஆட்கொண் டனவே. |
8 |
223
செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி
ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த்
தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு
மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே
நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. |
9 |
224
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக்
கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடை
பாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே
பிரியா(து) என்னுள் நின்றனவே. |
10 |
225
தூவி நீரொடு பூஅவை தொழு(து)
ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக்
கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள்
விடையான்அடி மேவுவரே. |
11 |
திருச்சிற்றம்பலம் |
திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
2. கோயில் |
பண் - நட்டராகம் |
226
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. |
1 |
227
ஒக்க ஒட்டந்த அந்தியும்
மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப்
பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு
தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன்
மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே. |
2 |
228
அலந்து போயினேன் அம்பலக்
கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
காலனை உயிர்செ வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
மேலொற்ற வந்தருள் செய்யாயே. |
3 |
229
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
கூத்தனே! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
பொன்பயப் பிப்பது வழக்கமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத்
திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. |
4 |
230
வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழந்(து) இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட
என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. |
5 |
231
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம்வளைத்து
அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை
வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர்
தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாலர்ப் பாதங்கள்
காண்பதோர் மனத்தினை உடையேற்கே. |
6 |
232
உடையும் பாய்புலித் தோலும்நல்
அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங்
கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும்
வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று
ஆரையும் உள்ளுவது அறியேனே. |
7 |
233
அறிவும் மிக்கநல் நாணமும்
நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு
தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன்
என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர்
ஏத்தநன் மாநடம் மகிழ்வானே. |
8 |
234
வான நாடுடை மைந்தனே!
ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய
படர்சடைப் பால்வண்ணனே என்பன்
தேனமர் பொழில் சூழ்தரு
தில்லையுள் திருநடம் புரிகின்ற
என் வாமணிப் பூணணி
மார்பனே! எனக்கருள் புரியாயே. |
9 |
235
புரியும் பொன்மதில் சூழ்தரு
தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
காதலித்(து) இனையவர் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
பரமன(து) அடியினை பணிவாரே. |
10 |
திருச்சிற்றம்பலம் |
திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
3. கோயில் |
பண் - இந்தளம் |
236
அல்லாய்ப் பகலாய் அருவாய்
உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை
மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள்
பரவ வெளிப் பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு)
அருளித் தேவன் ஆடுமே. |
1 |
237
அன்ன நடையார் அமுத
மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
காண விகிர்தன் ஆடுமே. |
2 |
238
இளமென் முலையார் எழில்மைந்
தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிரமலை
போல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர்
போற்ற அழகன் ஆடுமே. |
3 |
239
சந்தும் அகிலும் தழைப்
பீலிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின்
கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப்
பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட
நட்டம் நாதன் ஆடுமே. |
4 |
240
ஓமப் புகையும் அகிலின்
புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த
பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள்
சூடித் தேவன் ஆடுமே. |
5 |
241
குரவம் கோங்கம் குளிர்புன்னை
கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்ட
பத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே. |
6 |
242
சித்தர் தேவர் இயக்கர்
முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம்
பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த
தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ
நட்டம் குழகன் ஆடுமே. |
7 |
243
அதித்த அரக்கன் நெரிய
விரலால் அடர்த்தாய் அரளென்று
துதித்து மறையோர் வணங்கும்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக்
கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள
மேனிப் பரமன் ஆடுமே. |
8 |
244
மாலோ(டு) அயனும் அமரர்
பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா! அரனே!
அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை
மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள்
தாழப் பரமன் ஆடுமே. |
9 |
245
நெடிய சமணும் அறைசாக்
கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத்
தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆருர்
நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய
கோலக் குழகன் ஆடுமே. |
10 |
246
வானோர் பணிய மண்ணோர்
ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை
மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத
வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானோர் பாடல் பத்தும்
பாடப் பாவ நாசமே. |
11 |
திருச்சிற்றம்பலம் |
திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
4. கோயில் |
பண் - பஞ்சமம் |
247
கோல மலர்நெடுங்கண்
கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப்
பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ்
தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை
என்றுகொல் காண்பதுவே. |
1 |
248
காண்பதி யான் என்றுகோல்
திர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று)
அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய்
மறையோர் மலர்ப் பாதங்களே. |
2 |
249
கள்ளவிழ் தாமரைமேல்
கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே
உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற
ஒருவனை உணர்வரிதே. |
3 |
250
அரிவையோர் கூறுகந்தான்
அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
எம்பிரான்என் இறையவனே. |
4 |
251
இறையவனை என்கதியை
என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
நினைத்தேன் இனிப் போக்குவனே. |
5 |
252
நினைத்தேன் இனிப்போக்குவனோ?
நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த
மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக்
கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும்
தில்லைமாநகர்க் கூத்தனையே. |
6 |
253
கூத்தனை வானவர்தம்
கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவருவின்
முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும்
அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற
எம்பிரானடி சேர்வன்கொலோ? |
7 |
254
சேர்வன்கொலோ அன்னையீர்
திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி
அணிநீ(று) என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன்
எம்பிரான் என்பால் நேசனையே. |
8 |
255
நேசமு டையவர்கள்
நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர்
கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர்
தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும்
எம்மிறைவன்என்(று) ஏத்துவனே. |
9 |
256
இறைவனை ஏத்துகின்ற
இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
மகிழ்ந்தேத்துக வானெளிதே. |
10 |
திருச்சிற்றம்பலம் |