திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.96 திருஅன்னியூர் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி |
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே.
|
1 |
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.
|
2 |
நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.
|
3 |
பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.
|
4 |
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.
|
5 |
இன்பம் வேண்டுவீர்,. அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.
|
6 |
அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.
|
7 |
தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.
|
8 |
இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.
|
9 |
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.
|
10 |
பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |